நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 7, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 7, 2019




உலக செய்திகள்

1. தென் கொரியா, உலகிலேயே முதல் அதிவேக இணையச் சேவையானா   5G அதிவேக இணைய சேவை தொடங்கியுள்ளது.

தேசிய செய்திகள் 

2. வன விலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பை அளித்தற்காக வழங்கப்படும் “புவி நாள் அமைப்பு நட்சத்திர விருதானது” (Earth day Network star Award) நாகலாந்தின் வனக் காவலரான “அலெம்பா இம்சுங்கர்” (Alemba Yimchunger) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. ஐ.எல் மற்றும் எஃப்எஸ்(Infrastructure Leasing & Financial Services Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சந்திர சேகர் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தண்டனைக் கைதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா  மற்றும் பிரேசில் இடையேயானா ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

5. இந்தியாவின் முதல் “கார்பன் நேர்மறை குடியேற்ற கிராமம்” என்ற  குறீயீட்டை மணிப்பூர்மாநிலத்தைச் சேர்ந்த “பாயெங் கிராமம்” (phayeng) பெற்றுள்ளது.

6. ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் தேர்தலில் பங்கு பெறவுள்ள மூத்த வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக “சஹூலாத்”(Sahulat) என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

7. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பின் 70 வது ஆண்டு விழாவானது அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் கொண்டாடப்பட்டது.

8. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ஹைதராபாத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய “T.B.N ராதாகிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

9. நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் செல்லுவதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவானது “எஸ்எல்எல்” (SLL) என்ற இராக்கெட்டில் பயன்படுத்தும் ஆர்எஸ்-25 (Rs- 25) என்ற என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

வர்த்தக செய்திகள் 

10. இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...