நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 6, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 6, 2019





உலக செய்திகள் 

1. ஹார்வர்டு மருத்துவ பள்ளியில் உள்ள மனநல மருத்துவரான விக்ரம் பட்டேல் என்பவர் புகழ்பெற்ற ஜான் டிரிக்ஸ் கனடா காய்ர்டுனர் சர்வதேச ஆரோக்கிய விருதை வென்றுள்ளார். (John Dirks Canada Gairdner Global Health Award).

2. உணவு பற்றிய உலகளாவிய அறிக்கை 2019 ஆம் ஆண்டில் 53 நாடுகளில் 113 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தேசிய செய்திகள் 

3. தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆலோசக சேவை வங்கியுடன் இணைந்து ஆப்பிரிக்க நாடான மாலவியில் இந்திய – ஆப்ரிக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தை ((IAIARD – India Africa Institute of Agriculture and Rural Development) இந்தியா அமைக்க உள்ளது.

4. “Saffron Sword : centuries of Indic Resistance to Invaders” – என்ற புத்தகமானது மனோஷி சின்ஹாராவல் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் பிரைவேட் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

5. ராயல் என்ஃபீல்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வினோத் கே. தாசரி(Vinod K. Dasari) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராயல் என்ஃபீல்ட்டி தாய் நிறுவனமான ஐசர் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

6. கேமரூன் குடியரசிற்கான  இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக ராகேஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

7. இந்திய வான்பகுதிக்குள் விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு (IFMC) ஆகியவற்றை இயக்குவதற்கு தொலைதொடர்பு துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

8. முன்னாள் பாலிவுட் நடிகையானா மயூரி காங்கோ(Mayoori kango) கூகுள் இந்தியாவின் தொழில்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

9. உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மூரின் எண்டோடிடியாசெக் என்ற புதிய என்சைம்மை கண்டறிந்துள்ளது. இது பாக்டிரியா செல்சுவரை உடைக்கவும் பாக்டிரியா சார்த்த நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

வர்த்தக செய்திகள் 

10. ஆயுள் காப்பீட்டு கழகதின் (எல்.ஐ.சி)  நிர்வாக இயக்குனராக விபின் ஆனந்த்(Vipin Anand)நியமிக்கப்பட்டுள்ளார்

11. கர்நாடகா வங்கி பாரதி ஆக்ச லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இன்சூரன்ஸ் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

12. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் நிறுவனம் ஹாப்டிக்(Haptik) நிறுவனத்தை ரூ .700 கோடிக்கு வாங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

13. கோல்ப் விளையாட்டிற்கான ஆசிய சுற்றுப்பயணத்திற்க்கான சிறப்பு சாதனையாளர் விருது பவன் முஞ்சால் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தர வரிசை பட்டியலில் இந்திய கால்பந்து அணி 101 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் பெல்ஜியம் முதலிடத்திலும் பிரான்ஸ் இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

முக்கிய தினங்கள் 

15. ஏப்ரல் 05 - தேசிய கடல்சார் தினம்(National Maritime Day). இதன் மைய கருத்து:-"இந்திய பெருங்கடல்- ஒரு பெருங்கடல் வாய்ப்பு" (Indian Ocean- An Ocean of Opportunity)

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...