நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019




தேசிய செய்திகள் 

1. இந்திய இராணுவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் குறுக்கே 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை 40 நாட்களில் அமைத்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு மைத்ரி(Maitri) பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பலம் லே-லடாக் - ஐ இணைத்துள்ளது.

2. இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய வானொலிகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக “SVEEP” (Systematic Voters Education and Electoral Participation Program) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

3. Modi Again : Why Modi is right for India, An Ex-Communist Manifesto என்ற புத்தகமானது அப்பாஸ் மால்டாஹயர் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

4. State of Global Air - 2019 வெளியிட்ட அறிக்கையில் இந்தியா கற்று மாசுபட்டால் உயிரிழக்கும் மனிதர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

5. பல்வகை பயன்பாட்டுக்கான எம்எச்-60 ‘ரோமியோ’ சீஹாக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2.4 பில்லியன் டாலர்மதிப்பில் இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டர்களை வழங்கவுள்ளது .

6. திரிபுரா மாநிலம் நடப்பு தேர்தலில் 100 சதவீதம் வாக்குசாவடிகளை இணையத்தளத்துடன் இணைத்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் சீனா மொழியில் தேர்தல் பிரசாரம்செய்யப்பட்டது .

7. கஃபே அறிவியல் என்ற திட்டத்தை கேரளா அரசு அறிவியல் ஆராய்சியாளர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது

8. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் "மோடிக்கு" என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'சயீத்' விருது வழங்கி கௌரவித்துள்ளது

அறிவியல் தொழில்நுட்பம் 

9. சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT – Madras) குழுவானது பெட்ரோலியத்தின் கழிவுப் பொருளான டொலுவினை பென்சாயிக் அமிலாகமாற்றியமைத்துள்ளது.

வர்த்தக செய்திகள் 

10. 2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2 சதவீதமாக இருக்குமென ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது.

முக்கிய தினங்கள் 

11. ஏப்ரல் 02 - சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம் (International Children’s Book day)

12. ஏப்ரல் 04 - சர்வதேச சுரங்க தினம் (International Day for Mine Awareness and Assistance in Mine Action 2019). இதன் கருத்துரு :- "United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home"

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...