நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 10, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 10, 2019





தேசிய செய்திகள் 

1. சன் குழுமத்தின் தலைவரான விக்ரம்ஜித் சிங் சக்னே(Vikramjit Singh Sahney) சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் வெளியிட்ட தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஐஐடி-சென்னை(IIT-Chennai) முதலிடத்திலும் ஐஐஎஸ்சி-பெங்களூரு(IISC-Bangalore) இரண்டாவது இடத்திலும் ஐஐடி-டெல்லி(IIT-Delhi) மூன்றாவது இடத்திலும் உள்ளது.

3. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மணற்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கத்திற்காக ரூ 100 கோடி அபராதம் விதித்துள்ளது.

4. கோவா மாநில அரசு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் அதிகபட்ச வயதை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியுள்ளது.

5. இந்தியக் கடற்படையில் அதிநவீன தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்க்காக  இந்தியக் கடற்படையானது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

6. இந்தியா-இலங்கை இடையே பிராந்திய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்கிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

வர்த்தக செய்திகள் 

7. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின்  வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% - ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.

8. ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கான உலக பொருளாதார மன்றத்தின் 17 வது பதிப்பு ஜோர்டானில்(Jordan) பகுதியில்  நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள் 

9. முன்னாள் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான  கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் – 2019 போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லின்டான் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் டாய் சூ-யிங் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

11. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த அஸாரி ஜோசப் 12 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார .

முக்கிய தினங்கள் 

12. ஏப்ரல் 7 முதல் 14 வரை தேசிய கைத்தறி வாரம் கொண்டாடப்படுகிறது (National Handloom Week 2019 – April 7 to 14)

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...